CINEMA
காதல் கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகுமாரின் பேத்தி.. வைரலாகும் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களிலும் விஜயகுமார் நடித்துள்ளார். விஜய் குமாருக்கு முத்துக்கண்ணு என்ற மனைவி உள்ளார். கடந்த 1976-ஆம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என்ற மூன்று பிள்ளைகளும், விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினருக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். இப்போது அருண் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் குமார் மகள் அனிதா டாக்டராக இருக்கிறார்.
அவர் கல்லூரியில் படிக்கும் போது கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனிதா கோகுல் கிருஷ்ணன் தம்பதியினருக்கு தியா, ஸ்ரீ ஜெய் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தியா தனது அம்மா அப்பாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தியா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், பிரபு, சினேகா, பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர். சோசியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் மெஹந்தி பங்க்ஷன், ஹல்தி பங்க்ஷன், திருமண வரவேற்பு என தியாவின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் தான் வலம் வந்தது.
லண்டனில் வைத்து சிறப்பாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இன்று தியா தனது 26-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தனது கணவருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.