மனைவியுடன் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன சிவகார்த்திகேயன்.. வீடியோ..

By Mahalakshmi on தை 6, 2024

Spread the love

தேமுதிக தலைவர் மற்றும் முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி, அனைத்து திரையுலகினருக்கும் பெரும் இழப்பாக இருந்தது. மேலும்  சினிமா பிரபலங்களும் மற்றும் தொண்டர்களும் மன வருத்தத்துடனும்  இறுதி அஞ்சலியில்  அலைக்கடலென மக்களும் கலந்து கொண்டனர். இதில் பல சினிமாதுறை  பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.

   

இதனால்  இறுதியஞ்சலியில் கலந்து கொள்ளாத நடிகர்கள் பலரும் விஜயகாந்த் சமாதிக்கும்  வீட்டிற்க்கும்  சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டாப் 10 நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது  மனைவியுடன்  விஜயகாந்த் வீட்டிற்கு சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வந்தார்.

   

#image_title

 

கேப்டன் விஜயகாந்த் மகனான நடிகர் சண்முக பாண்டியனிடம் சிறிது நேரம்  சிவகார்த்திகேயன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாததற்கு காரணத்தையும் கூறி, கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனடி வேண்டுகிறேன்  என்றும், அவரின் நினைவு திரையுலகில் எப்போதும் இருக்கும் எனவும் கூறினார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியுடன் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு  இரங்கல் தெரிவித்த வந்த  நிகழ்வு வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.