தேமுதிக தலைவர் மற்றும் முன்னணி நடிகரான விஜயகாந்த் மறைவின் போது இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாத பிரபலங்களை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக வடிவேலு நன்றி மறைந்தவர் என பலரும் இணையதளத்தில் குறைக்கூறி வருகின்றனர். இந்த நிலையில் வடிவேலு வராவிட்டாலும் அவர் மனம் விட்டு அழுததாகவும் ஒரு நாள் முழுக்க சாப்பிடவில்லை என்றும் அவரது நண்பர் கூறியிருந்தார்.

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிச 28 ல் உயிரிழந்தார். அவரின் இறப்பு திரை உலகினருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடலென திரண்ட ரசிகர்களும், தொண்டர்களும் மற்றும் பிரபலங்களும் சென்னைக்கு வந்திருந்தனர். அதே சமயத்தில், விஜயகாந்த் மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வராதது சர்ச்சையை ஏற்படுகிறது.

அதுவும் முக்கியமாக அவரால் திரை உலகிற்கு வந்த வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது பலரும் விமர்சித்து வந்தனர். இறுதி அஞ்சலிக்கு கூட வரவில்லை என்றாலும் ஒரு இரங்கல் செய்தியை கூட தெரிவிக்கவில்லை என விஜயகாந்த் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த செய்தி பற்றி யூடூப் சேனலுக்கு பேட்டி அளித்த வடிவேலுவின் நெருங்கிய நண்பரான சிறுத்தை கட்சி நிர்வாகி மாலின் கூறிருந்தார்.

இதற்கு கூட வடிவேலு வரமாட்டாரா என அவரை குறை சொல்பவர்களுக்கு மாலின் கூறியதாவது; உண்மையில் விஜயகாந்த் செய்த உதவிகளை எல்லாம் சொல்லி வடிவேலு ரொம்ப வருத்தப்பட்டதாகவும் அவருடன் நெருங்கி பழகிய எங்களைப் போன்ற நண்பர்களுக்கு மட்டுமே அது தெரியும் எனவும் கூறியிருந்தார். மேலும் பல கேள்விகளையும் கேட்டிருந்தார்.
வடிவேலு வராதது பற்றி இவ்வளவு குறை சொன்னீர்களே., வடிவேலுவின் தாய் மற்றும் தம்பி ஆகியோரின் மறைவிற்கு நடிகர் சங்கத்திலிருந்து யாராவது வந்தீர்களா என்ற கேள்வியும் எழுப்பினார். பத்து வருடம் நடிக்க முடியாமல் இருந்தபோது யாரும் கண்டு கொள்ளாததால் வடிவேலும் மனமுடைந்து போனதாகவும் மாலின் கூறினார். எல்லோரும் வடிவேலு ஹாப்பியாக இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு கண்ணீர் விட்டு அழுதார், ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமலும் இருந்தார்.

இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தான் அவர் வரவில்லை மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என மாலின் கூறினார். வடிவேலு வராததை இவ்வளவு குறை சொல்கிறீர்கள் ஆனால் விஜயகாந்திற்கு துரோகம் செய்து ஓடிய எம்எல்ஏக்களை பற்றி மட்டும் ஏன் பேசவில்லை என அவர்களை விமர்ச்சித்து கேள்வி எழுப்பினார்.
