Categories: சினிமா

மூன்று மடங்கு அதிக சம்பளம்.. அந்தப் படத்துல தான் விஜயகாந்த் கோடியில் சம்பளம் வாங்கினார்.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயகாந்த் வைத்து படம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்து ராவுத்தரை போய் பார்த்து பேசினேன். அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடி விடுவேன் என நினைத்து விஜயகாந்த் வாங்குவதை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் கேட்டார். நானும் உடனே சம்மதம் சொன்னதும் அவர் ஆடிப் போயிட்டாரு.

எப்போது அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டதும் அவருக்கு பேச்சே வரல. கொஞ்ச நேரம் பொறுங்க விஜயகாந்த் வந்துவிடும் பேசிட்டு சொல்றேன் என்று சொல்லிட்டாரு. அதன் பிறகு விஜயகாந்த் ஓகே சொன்னதும் கூலிக்காரன் படத்துக்காக நிறைய போட்டோஸ் எடுத்தேன். ஆயிரத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் கூலிக்காரன் திரைப்படம் மூலமாகத்தான் கோடியில் சம்பளம் பெற்றார் என்று தாணு பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

7 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

14 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

18 minutes ago

ஐயோ கடவுளே… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… அதிர்ச்சி பின்னணி என்ன?… கொந்தளிப்பில் கிராம மக்கள்…!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல்…

19 minutes ago

CM விஜய்க்கு அடுத்த ஷாக்…. டெல்லியில் வெடிக்கும் தமிழக சட்டம்-ஒழுங்கு விவகாரம்…. கவர்னர் அர்லேகர் கொண்டு செல்லும் சீக்ரெட் ரிப்போர்ட்…..!

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதி நிலவரம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு மாநில…

23 minutes ago

அம்மடியோ… என்ன இது?… மதுக்கடையில் புகுந்து ஃபுல் போதையில்… மயங்கி விழுந்த ரக்கூன்… ஒரே நாளில் குவிந்த ரூ 2.3 கோடி… இணையத்தில் வைரலாகும் அதிசய சம்பவம்…!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மதுக்கடை ஒன்றிற்குள் நுழைந்து, மது அருந்தி மயங்கி விழுந்த ரக்கூன் விலங்கு, உள்ளூர் விலங்குகள்…

25 minutes ago