நேற்று இரவு முதல் சமூக வலைத்தளங்கள் மற்றும் அனைத்து செய்தித்தாள்களிலும் பரபரப்பாக இருக்கக்கூடிய செய்தி தான் பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சி. ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனா திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு நேற்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை ஒட்டுமொத்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாடகி கல்பனா யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1980 ஆம் ஆண்டு பிறந்த கல்பனாவின் தந்தை டி.எஸ் ராகவேந்திரா, தாய் சுலோச்சனா. தந்தை ராகவேந்திரா நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். அதனைப் போலவே தாய் சுலோச்சனாவும் பிரபல பாடகி தான். ராகவேந்திரா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்களில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் நடிகே ரேவதிக்கு தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். அந்த படத்தில் அழகு மலராட பாடலுக்கு ரேவதி நடனமாடும் போது டி எஸ் ராகவேந்திரா இசையமைப்பார். இதனைத் தொடர்ந்து சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி மற்றும் வாய் கொழுப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக தன்னுடைய 74 வயதில் காலமானார். இவருடைய மகள்தான் கல்பனா. இவர் தன்னுடைய ஐந்து வயது முதலே பாடி வருகின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அவர் இதுவரை 1500 பாடல்களை பாடி உள்ளார். இதனைத் தவிர இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவர் 3 ஆயிரம் பாட்டு கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்டார் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆவார். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார். தன்னுடைய ஆறாவது வயதில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் கல்பனா நடித்திருந்தார்.
இவர் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ளார். போடா போடா புண்ணாக்கு மற்றும் திருப்பாச்சி அருவாள் உள்ளிட்ட பாடல்களை கல்பனா தான் பாடினார். கல்பனா இசை குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவருடைய தங்கையும் ஒபேரா பாடகி தான். கல்பனா தன்னுடைய கணவருடன் ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் திடீரென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…