Categories: சினிமா

விஜயகாந்தை வில்லனாக வைத்து கதைகள் எழுதி இருக்கேன்.. பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 1991 ஆம் ஆண்டு விஜயகாந்துக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு அடுத்த ஆண்டு அவரின் மூத்த மகனான விஜய பிரபாகரன் பிறந்தார். அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு சண்முக பாண்டியன் பிறந்தார்.

2000 களுக்குப் பிறகு விஜயகாந்த் மெல்ல மெல்ல தன்னுடைய மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு  சென்றார். விஜயகாந்த் மொத்தமாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் ஒரு படம் கூட தமிழில்லாத பிற மொழிப் படங்கள் இல்லை. சமீபத்தில் அவரது மரணம் தமிழக அளவில் ஒரு மாபெரும் துக்க நிகழ்வாக அமைந்தது. இன்னமும் கூட அவரது தொண்டர்களும் ரசிகர்களும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தான் விஜயகாந்தை வில்லனாக உருவகித்து சிலக் கதைகளை சிறுவயதில் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். அதில் “எனக்கு சிறுவயதில் இருந்தே விஜயகாந்தைப் பிடிக்கும். நாடகங்களில் அவர் பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். நான் சிறுவயதில் இருந்தே கதைகள் எழுதி வருகிறேன். விஜயகாந்தை வில்லனாக வைத்து சில கதைகள் எழுதியுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

4 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

4 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

5 மணத்தியாலங்கள் ago