Categories: சினிமா

விஜயகாந்த் – சில்க் ஸ்மிதா நடித்து பாதிலேயே நின்று போன திரைப்படம்?.. பலரும் அறியாத சுவாரசிய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் சில்க் ஸ்மிதாவும் சேர்ந்து நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆகாமலே போய்விட்டது. அந்தப் படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை அதில் என்னென்ன சிக்கல்கள் இருந்தது என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத புதிராகத்தான் உள்ளது. 80 காலகட்டத்தில் விஜயகாந்த் ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார். அதே போல தான் சில்க் ஸ்மிதாவும் அவருடைய படங்கள் மூலமாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையே கவர்ந்து வைத்திருந்தார். விஜயகாந்த்தும் சில்க் ஸ்மிதாவும் சேர்ந்து நடித்த படங்கள் ஆன பட்டணத்து ராஜாக்கள், நீதி கிடைத்தது ஆகிய படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்த படங்களாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருமே இணைந்து மற்றொரு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமலேயே போய்விட்டது. அதாவது விஜயகாந்த்தையும் சில்க் ஸ்மிதாவையும் வைத்து இயக்குவதற்கு கதை எல்லாமே தயாராக இருந்துள்ளது. அந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் கால காண்டம் என்ற டைட்டிலும் வைத்துவிட்டனர். இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸர் ஆகவும், அவருக்கு எதிராக ஒரு ரவுடிகள் கேம் இருப்பது மாதிரியும் கதை இருந்தது. அதனைப் போலவே இந்த படத்தில் சில்க் சுமிதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இதில் அவருக்கு கவர்ச்சியான ரோலும் கிடையாது. அதே மாதிரி தியாகு உடன் இவருக்கு தொடர்பு இருப்பது போன்ற ஒரு ரோலும் இருந்துள்ளது. கதையெல்லாம் தயார் செய்யப்பட்டு கிராமப்புறங்கள் மட்டுமல்ல சென்னையிலும் இந்த படத்தின் சூட்டிங் நடந்துள்ளது.

ஆனால் இப்படத்தின் சூட்டிங் பாதியிலேயே நின்று போய்விட்டது. காரணம் என்னவென்றால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாக போய்விட்டது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அந்த காலகட்டத்தில் பிசியான நடிகராக இருந்ததால் கால் சூட் கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேபோல தான் சில்க் சுமிதாவும் அப்போது ரொம்பவும் பிசியான நடிகையாக இருந்ததால் அவராலும் கால் சூட் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இப்படம் பாதியிலேயே நின்று போனதற்கு மற்றொரு காரணமும் உள்ளதாம்.

அதாவது விஜயகாந்த்-கும் இப்படத்தின் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படத்தில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர். அதே சமயம் இப்படத்தில் பாதி சூட்டின் முடிவடைந்த நிலையில் அந்த காட்சிகள் அனைத்தையும் ஒரு பிலிம் ரோலில் சென்னையில் இருக்கக்கூடிய வேர் ஹவுஸில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எண்பதுகளின் இறுதியில் அங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பிலிம் ரோல் அனைத்தும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த படம் எதனால் ரிலீஸ் ஆகவில்லை என்பதற்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago