அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அவர் இதுவரை எந்தவொரு கட்சியிலும் சேராமல் மௌனம் காத்து வருகிறார்.
தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசுவதில் நீடிக்கும் சிக்கல்களும், கட்சியில் இணைந்தால் ஏற்கனவே இருக்கும் சீனியர் தலைவர்களுக்கு மத்தியில் தனக்கு உரிய முக்கியத்துவமும் தகுந்த பொறுப்பும் கிடைக்குமா என்ற அரசியல் குழப்பமுமே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, தனது செல்வாக்குமிக்க விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாகக் களம் இறங்கித் தனது பலத்தை நிரூபிக்க அவர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது புதிய தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
