எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும் சிலிண்டர் வடிவ LPG கேஸ் என இரண்டு இணைப்புகளையும் ஒன்றாக வைத்திருப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடையின்றி எரிவாயு கிடைக்கவும் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறையின்படி, இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பவர்கள் தங்களின் LPG இணைப்பை உடனடியாகச் சரண்டர் செய்ய வேண்டும்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ‘தேசிய பைப் இயற்கை எரிவாயு இயக்கம் 2.0’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 2026-ல் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த புதிய விதியை முறைப்படுத்துவதற்காக அரசு வழங்கிய 90 நாட்கள் அவகாசம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பிறகும் இரண்டு இணைப்புகளையும் தொடர்ந்து வைத்திருக்கும் வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

   

இருப்பினும், இந்த விதிமுறை பைப்லைன் வசதி உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் பகுதியில் இன்னும் PNG விநியோகம் தொடங்கப்படவில்லை என்றால், உங்களின் LPG இணைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது; PNG வசதி உங்களைத் தேடி வரும் வரை எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி எப்போதும் போல தொடர்ந்து வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.