ஆத்தாக்கள் வாக்கு இரட்டை இலைக்குத்தான்… இல்லையென்றால் தலையணை வச்சு அமுக்கி முடிச்சி விடுங்க… விஜயபாஸ்கர் சர்ச்சை பேச்சு..!!

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வாக்காளர்களைக் கவரும் வகையில் பேசிய சில வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு வழங்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும், வாக்கு என்பது இரட்டை இலைக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA) விழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பக்கத்து வீடு, அடுத்த வீடு என எல்லா வீடுகளிலும் உள்ள ஆத்தாக்களை (பெண் வாக்காளர்கள்) எல்லாம் கரெக்ட் செய்து விடுங்கள். கபக்கென்று அமுக்கிப் போட்டு விடுங்கள்… இல்லையென்றால் தலையணை வைத்து முடித்து விடுங்கள்” எனப் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் ‘கணக்கு வழக்குகளைச்’ சொன்னதாகவும், வேறு எதையும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் உடனேயே விளக்கமளித்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசியல் நாகரிகம் இன்றிப் பேசுவதாக திமுக உள்ளிட்ட மாற்றுத் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.