சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின் போது அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவற்றிற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை முடிவடைந்த நிலையில், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
