இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு TVK தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றிக்கழகத்தை உட்படுவதற்கான அவசர வேண்டுகோள். ஐயா..! TVK சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்கு உட்பட்ட வருகை மற்றும் செயல்பாடுகளின் நிறுவியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மாநிலம் முழுவதும் போட்டியிட இருக்கிறோம்.
ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையா? என்ற பார்வை இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக எங்கள் மரியாதை உடன் வலியுறுத்துகிறோம். SIR தொடர்பான கூட்டங்களுக்கு TVK விற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஆலோசனை கூட்டங்களுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
