விஜய் முதல்வராக பதவியேற்பு… அடுத்த கட்ட நகர்வு என்ன..? ஆளுநருக்குப் பறந்த அவசரக் கடிதம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

By Soundarya on வைகாசி 5, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆட்சி அமைக்கத் தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு விஜய் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

ஆளுநருக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, விரைவில் பதவியேற்பு விழா நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ஆளுநர் தரப்பிலிருந்து இதற்கான நேரம் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.