Connect with us

டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி…. சிக்கலில் சூர்யா படம்…. விடுதலை 2 ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்…!!

CINEMA

டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி…. சிக்கலில் சூர்யா படம்…. விடுதலை 2 ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்…!!

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய படங்கள் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படம் ஹிட் ஆனது.

இதனால் விடுதலை 2 படத்தையும் வெற்றிமாறன் விறுவிறுப்பாக இயக்க ஆரம்பித்தார் . ஆனால் அவர் நினைத்தபடி விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் முடியவில்லை. அதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியால் விடுதலை 2 படபிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

   

இதனால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது. இந்த படத்தில் சூரி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்து விட்டாராம். ஆனால் விஜய் சேதுபதி அடுத்தடுத்த பட படிப்புகளில் பிஸியாக இருப்பதால் விடுதலை 2 படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

இந்த படத்தை ரிலீஸ் செய்த பிறகு தான் வாடிவாசல் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். விடுதலை 2 பட பிடிப்புகள் தாமதமாவதால் வாடிவாசல் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top