ரகசியமாக நடைபெறும் “லியோ” எடிட்டிங் வேலைகள்…. அதுக்குன்னு இப்படியா…? பிரபல நட்சத்திர ஹோட்டலில் கெடுபிடி…!!

By admin on புரட்டாதி 19, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் லியோ. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் லியோ பட குழுவினர் சென்னையில் இருக்கும் பிரபல Somerset நட்சத்திர ஹோட்டலில் எடிட்டிங் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

   

   

படம் பற்றிய எந்த தகவலும் லீக் ஆகி விடக்கூடாது என்பதில் பட குழுவினர் மிகவும் கவனமாக உள்ளனர். எடிட்டிங் ரூமில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவான லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்த லியோ படம் பிரம்மாண்ட வெற்றியை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.