பீகாரில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. நீண்டகாலமாகவே தமிழகத்தில் நுழைய முடியாத பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது.
அதே சமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பல முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அக்கட்சியின் துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். இதன் மூலம் தவெகவில் அதிகாரபூர்வமாக செங்கோட்டையன் இணைந்துள்ளார். மேலும், அவருக்கு பொன்னாடை போர்த்தி தலைவர் விஜய் வரவேற்றார். இதையடுத்து செங்கோட்டையனுடைய ஆதரவாளரான சத்யபாமாவுக்கும் பொன்னாடை போர்த்தி, உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவரான புதுச்சேரியின் பாஜக மாநில தலைவராக நீண்ட காலமாக இருந்த சாமிநாதன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெறலாம் என நினைத்த பாஜகவுக்கு பாஜகவை சேர்ந்த பலரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (36). வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பிய…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 16 வயது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கமலா நகர் பகுதியில், மதுபோதையில் அதிவேகமாகச் சொகுசு காரை ஓட்டி வந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர்,…
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோழிஞ்சம்பாறை மேனன்பாறையில், தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைத் தாயே கொடூரமாகக் கொலை செய்து…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
சாலையில் திடீரெனக் குறுக்கே பாய்ந்த தெரு நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்து, எதிரே…