சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா அருகே உள்ள பகுதியை சேர்ந்த லதா (23) என்ற பெண்ணுக்கு சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில நாட்கள் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் பிறகு லதாவை கணவர் குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தும் மனரீதியான தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் மகளிடம் இருந்து செல்போனில் அழைப்பு எதுவும் வராததால் அவருடைய பெற்றோர் குருராஜின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மகள் லதா அங்கு இல்லாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறுதியாக லதாவின் செல்போன் சிக்னல் பத்ராவதி நீர்ப்பாசன கால்வாய் பகுதியில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் ஆய்வு நடத்திய போது நீர் பாசன கால்வாயின் கரையோரம் லதாவின் செல்போன் மற்றும் காலணிகள் கிடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் என்னுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமையால் நான் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று செய்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து கால்வாயில் இருந்த லதாவின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…