எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படைத்தளபதியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இனி விஜயின் படைத்தளபதியாக மாறியுள்ளார். 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர். அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுவோம் என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூறிவந்த நிலையில், செங்கோட்டையனின் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இருந்தாலும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்த நிலையில் ஓபிஎஸ் உடன் ஒரே காரில் செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு சென்றதைத் தொடர்ந்து மொத்தமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இன்று இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய செம்மலை, “பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை, செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தற்கொலைக்கு சமமான முடிவு. தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து…
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், டெல்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில…