நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர். கடந்த 1980, 90களில் விஜயகாந்த் படங்கள் என்றாலே, தியேட்டர்களில் திருவிழா கூட்டம்தான். குறிப்பாக பெண்களின் நாயகன் விஜயகாந்த். அவரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் பெண்களுக்கு பிடித்தமான கதைகளில் நடிப்பார். பெண்களை உயர்வாக தன் படங்களில் கூறுவார். ஆனால், அவரது மகன்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, தமிழ் சினிமா திரையில் தோன்றிய போது, விஜயகாந்துக்கு கிடைத்த அங்கீகாரமும், வரவேற்பும் கிடைக்கவில்லை. இதனால் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
.jpg?$p=0addcd3&f=16x10&w=852&q=0.8)
ஆனால் இதே போன்ற ஒரு நிலைமை, நடிக்க வந்த ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கும் ஏற்பட்டது. இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார் விஜய். அடுத்து ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே என பல படங்கள் நடித்தும் அவருக்கான எந்த அங்கீகாரமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கவில்லை.இதே நிலை நீடித்தால் தன் மகன் சினிமாவில் நீடித்திருக்க முடியாது என உணர்ந்த எஸ்ஏ சந்திரசேகர், விஜயகாந்திடம் கோரிக்கை வைக்க உடனடியாக விஜயை தனது தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடிக்க வைத்தவர் விஜயகாந்த்.

அதே போல் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், விஜய் அவரை தனது படத்தில் தம்பியாக நடிக்க வைத்திருந்தால், அவர் பட்டிதொட்டி எல்லாம் விஜயகாந்த் மகனாக சென்றிருப்பார். ஆனால் அதை விஜய் செய்யவில்லை. அதுமட்டுமின்றி தன் மகன் நடித்த சகாப்தம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வர வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார் விஜய்காந்த். நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு நேரில் சென்ற விஜயகாந்த், பிரேமலதா இருவரும் நேரில் விஜயை பார்த்து அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் விஜய் வர மறுத்துவிட்டார்.

அதனால்தான் உடல்நலமில்லாத விஜயகாந்தை பார்க்க விஜய் அனுமதி கேட்ட போது, பிரேமலதா குடும்பம் மறுத்து விட்டது. தன்னுடைய வளர்ச்சி காலத்தில், விஜயகாந்த் தனக்காக செந்தூரப்பாண்டியில் நடித்து உதவியது போல, விஜயும் அவரது மகன் வளர்ச்சிக்காக உதவ முன்வந்திருக்க வேண்டும். அதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசி. ஆனால் விஜய் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என, வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

#image_title
