பிக் பாஸ் சீசன் ௭ நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது என்று தான் சொல்ல வேன்டும். இன்னும் சில தினங்கள் தான் பைனலுக்கு உள்ளது. அதனால் சில தினங்களுக்கு முன்பே ticket to finale டாஸ்க் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆரம்பம் முதல் போட்டியாளர்கள் பைனலுக்கு நுழைய போராடி வருகின்றனர். இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒரு சில டாஸ்க்குகளை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் டாஸ்க்குகள் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டு வந்தன.
அதில் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வமாக பங்குபெற்று வருகின்றனர். அந்த வகையில் card task ஒன்று கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் தாங்கள் choose பண்ணும் கார்டு என்னவோ அதன்படி தங்களது முடிவை தெரிந்தது அதன்படி நடக்க வேண்டும். இறுதியில் அவர்கள் முயலை எடுக்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். இதில் நேர்மையாக விளையாடினார்கள் அர்ச்சனா, தினேஷ், மாய, ரவீனா. ஆனால் ஒரு பக்கம் bully gang என்று சொல்ல பட்ட மாயா, பூர்ணிமா, நிக்சன் இந்த விளையாட்டில் ஒரு சில கோல்மால் செய்துள்ளனர்.
இந்த செயலுக்கு விஜயும் ஒரு காரணமாகிவிட்டார், அவரின் செயலால் தான் நிக்சன் ஒரு தவறை செய்துவிட்டார். இது வெளியான நிலையில் இந்த வாரம் கமல் இதை தட்டி கேட்க்க வேண்டும் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தினர். அதனால் வார இறுதியான இன்று இதனை கமல் அவர்கள் தப்பு செய்த நிக்சன் மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் கேள்வி கேட்க்கும் விதமாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.