விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகித் ஜலீல் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய அரசு மற்றும் காவல்துறை தரப்பிலிருந்து சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த விழா ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். மேடையில் விஜய் அரசியல் ரீதியாகப் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விழாவிற்கு வரும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள், அக்கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் அல்லது துண்டுகள் போன்ற அரசியல் அடையாளங்களுடன் வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விஜய் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் சொல்லும் ‘குட்டி ஸ்டோரி’ மற்றும் அரசியல் கருத்துக்கள் இந்த முறை இடம்பெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…