BREAKING: கடைசி நேரத்தில் விஜய்க்கு போடப்பட்ட தடை… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகித் ஜலீல் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய அரசு மற்றும் காவல்துறை தரப்பிலிருந்து சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது  இந்த விழா ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். மேடையில் விஜய் அரசியல் ரீதியாகப் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விழாவிற்கு வரும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள், அக்கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் அல்லது துண்டுகள் போன்ற அரசியல் அடையாளங்களுடன் வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விஜய் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் சொல்லும் ‘குட்டி ஸ்டோரி’ மற்றும் அரசியல் கருத்துக்கள் இந்த முறை இடம்பெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.