இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25% (25 bps) குறைக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் நான்கு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25% என்ற அளவில் உள்ளது. ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், அதனைப் பின்பற்றி வணிக வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைக்கும். வீட்டுக் கடன் , வாகனக் கடன் , தனிநபர் கடன் ஆகியவற்றிற்கான மாதாந்திரத் தவணை (EMI) குறையும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் நிம்மதி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
