Categories: சினிமா

அஜித்துக்கு பில்லா… அப்ப விஜய்க்கு?- ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க இருந்த தளபதி… ஆனா கடைசிவரை நிறைவேறல!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

இப்படி விஜய்யை ஒரு விடலைப் பையனாகவும், சாக்லேட் பாய் ஹீரோவாகவும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் அவருடைய தந்தை SAC தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் விஜய்யை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சில படங்கள் அவரை ஹீரோவாக்கி தயாரித்து நஷ்டமடைந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் ஹீரோவானதும் தன்னுடைய கேரியரை விட்டுவிட்டு அவரை முன்னணி ஹீரோவாக்க வேண்டும் என தொடர்ந்து உழைத்தார்.

#image_title

சுருக்கமாக சொன்னால் ரஜினிகாந்தின் வழியில்தான் விஜய் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பயணம் செய்து வருகிறார். சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் அவரின் வழியைதான் பின்பற்றி வருகிறார். ஒருபடி மேலே போய் அரசியல் கட்சியையும் ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் விஜய்யின் ஆதர்சமாக இருந்த ரஜினியின் முரட்டுக் காளை திரைப்படத்தின் ரீமேக்கில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அஜித் 2007 ஆம் ஆண்டு பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்து சூப்பர் ஹிட்டாக்கினார். அப்போது ரீமேக் ட்ரண்ட் தமிழ் சினிமாவில் பரவிய நிலையில் விஜய்யை வைத்து முரட்டுக்காளை திரைப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. பின்னர் முரட்டுக் காளை சுந்தர் சி நடிப்பில் ரீமேக் ஆனது.

vinoth

Recent Posts

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

54 seconds ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

8 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

13 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

16 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

20 minutes ago

விஜய் கட்சியை வைத்து சூதாட்டம் நடக்குது… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…

23 minutes ago