2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்போவதே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் எனத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதல்வரானது போல, 2029-ல் அவர் நாட்டின் பிரதமராவார் என்றும், அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழ்நாடே விளங்கும் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகப் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெக, அடுத்தகட்டமாகத் தேசிய அரசியலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆட்சியில் அமர்ந்தது முதல், வடமாநில இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர்களைக் கொண்டு விஜய் தொடர்பான ரீல்ஸ்கள் மற்றும் விளம்பரப் பரப்பரப்புகளைக் கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் விஜய்யின் பேச்சுகள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தத் தீவிரமான பிரச்சாரத்தின் விளைவாக, அண்மையில் ‘இந்தியா டுடே’ நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், நாட்டின் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் 9.2% ஆதரவுடன் விஜய் 3-வது இடத்தைப்பிடித்துள்ளார். இந்த வெளியீடு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றால் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எச்சரித்துள்ளார். அதேவேளையில், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகிய காங்கிரஸ் எம்பி-க்கள் முதல்வர் விஜய்யைச் சந்தித்தபோதிலும், தவெக தரப்பில் விஜய்யை அடுத்த பிரதமர் எனக் கூறுவது குறையவில்லை.
இதுகுறித்து விரிவாகப் பேசிய எம்.எல்.ஏ கனிமொழி, “2029-ல் பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவதில்லை, தமிழ்நாடே தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டார். மேலும், 2026-ல் விஜய் முதல்வராவார் என்று தாம் கூறியதை நினைவுகூர்ந்த அவர், 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றார். விஜய்யை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததில் ராகுல் காந்திக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும், அதேபோல அவரே விஜய்யின் கையைப் பிடித்துப் பிரதமர் நாற்காலியிலும் அமர வைப்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…