விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி ஜீவா கொடுத்த பணத்தை எடுத்து முத்துக்கு கொடுத்து விடலாம் என்று பிளான் போடுகின்றார். அதன்படி இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் முத்துவையும் மீனாவையும் அழைத்த ரோகினி அந்த பணத்தை அண்ணாமலை இடம் கொடுக்கிறார்கள்.
நாங்கள் மீனாவின் நகைக்கான பணத்தை கொடுக்கிறோம் என்று கூறியிருந்தோம். சொன்னபடி முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருக்கிறேன். இந்தாங்க அங்கிள் வாங்கிக்கோங்க என்று அண்ணாமலை இடம் கூறுகிறார் ரோகிணி. உடனே அது என்னுடைய பணம் இல்லை. யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட போய் கொடுங்க என்று சொல்லுகிறார் ரோகிணி. உடனே மனோஜ் ரோகினியிடம் இருந்து பணத்தை வாங்கி முத்துவிடம் கொடுக்க முதலில் முத்து வாங்க மறுக்கின்றார்.
எங்களுக்கு மொத்த பணம்தான் வேண்டும். அதில் கொஞ்ச பணத்தை கொடுத்து விட்டு மீதியை அப்படியே அமுக்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா? என கேட்க நான் மீத பணத்தை கட்டாயம் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று ரோகினி கூறுகிறார். இதை எடுத்து எதுவும் பேசாமல் முத்து அந்த பணத்தை வாங்கிக் கொள்கின்றார். அப்போது ரோகிணி இன்னும் மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் பணத்தை நான் சீக்கிரம் தந்து விடுகிறேன் என்று சொல்கிறார் .
இதை பார்த்த விஜயா உங்களுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்க என் அப்பாவிடம் வாங்கி நான் அனுப்பி வைத்தேன் என்று கூறுகிறார் . உடனே கேட்டது தான் கேட்ட முழு பணத்தையும் கேட்டு அவங்க மூஞ்சில எரிஞ்சு இருக்கலாமே என்று கூறுகிறார். மேலும் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டிய வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றார்.
உடனே ரோகினி எல்லாமே கூடிய சீக்கிரம் கொடுத்து விடுவோம் என்று பிசினஸ் பண்ணும் தைரியத்தில் பேசுகிறார். இதைத் தொடர்ந்து இந்த பணத்தை வைத்து நகை வாங்கலாம் என்று மீனாவிடம் கூறுகிறார். ஆனால் மீனா எனக்கு இப்போது நகை வேண்டாம். மாடியில் நமக்கு ஒரு ரூம் கட்ட வேண்டும் . அதற்கு நாம் நல்ல சம்பாதிக்கணும். இந்த பணத்தை வைத்து இன்னொரு கார் வாங்கி ஒரு டிரைவர் போட்டு பிசினஸ் பண்ணலாம் என்று கூறுகிறார்.
இந்த ஐடியா முத்துக்கு நல்லதாக பட வேறொரு காரை வாங்க முடிவு செய்கிறார். இந்நிலையில் மீனா மாமா அத்தை இடம் பேசவே மாட்டேங்கிறார். இதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். நாம் ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும் கோபம் தீர்ந்து விட்டால் அவர்களை பேசிக்கொள்வார்கள் என்று ஸ்ருதி சொல்கின்றார். உடனே மீனா அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது.
நாம ஏதாவது முயற்சி பண்ணி அத்தையும் மாமாவையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று கூறுகின்றார். இதையடுத்து வழக்கம்போல் மீனா விஜய்யுடன் பேச செல்லும்போது விஜயா கண்டபடி மீனாவை திட்டி விடுகின்றார். அதற்கு ஸ்ருதி உங்க மேல தப்பா வச்சுக்கிட்டு எதுக்கு மீனாவை திட்டுறீங்க. நீங்க பண்ண தப்புக்கு மீனாவிடம் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசுகின்றார். ஆனால் மீனா அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, அத்தை மாமாவிடம் பேசினால் போதும் என்று விஜயாவிடம் கெஞ்சி கேட்கின்றார். இப்படி தான் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.