நடிகர் விஜய் கட்டும் பிரம்மாண்ட திரையரங்கு… அதுவும் எங்க தெரியுமா..? வருமானத்தை பக்காவா ரெடி பண்ணிட்டாரே..!

By Mahalakshmi on ஜூலை 23, 2024

Spread the love

நடிகர் விஜய் பிரம்மாண்டமான திரையரங்கு ஒன்றைக் கட்ட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதை எந்த இடத்தில் கட்டுகிறார் என்பது குறித்து செய்தி கிடைத்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கின்றார்.

   

   

இப்படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு நடிகர் விஜய் முழு நேரமும் அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

 

சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் விஜய் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலில் குதிக்கிறாரா? என்று பலரும் கூறி வந்தார்கள். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகினாலும் வருமானத்திற்கு சிறப்பான ஒரு விஷயத்தை செய்து வருகின்றார் நடிகர் விஜய். சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் நிலையில் தற்போது பிரம்மாண்ட திரையரங்கு ஒன்று கட்டப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

ஆனால் எந்த இடத்தில் கட்டப் போகிறார் என்பது தொடர்பான எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. அதன்படி பாண்டிச்சேரிில்தான் விஜய் அந்த பிரம்மாண்ட திரையரங்கை கட்டப் போகிறார். புஜ்ஜி ஆனந்தின் வழிகாட்டுதலின் பெயரில் பாண்டிச்சேரியில் இந்த திரையரங்கு உருவாகப் போகிறது என்று கூறுகிறார்கள்.

மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது பாடல் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.  இந்த பாடலில் நடிகர் விஜய் திரிஷாவுடன் இணைந்து நடனமாடி இருக்கின்றார் என்றும் தமிழ் சினிமாவில் பேசி வருகிறார்கள்.