சின்னத்திரையில் இருக்கும் சீரியல்களில் எது அதிக வரவேற்பை பெறுகின்றது என்பது டிஆர்பி ரேட்டிங்கை வைத்து கணக்கிடப்படுகின்றது . ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடிக்கின்றது. ஆனால் தினந்தோறும் இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறுவது சீரியல்கள் தான்.

தங்களது சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு சேனல்களில் புதுப்புது நாடகத்தை கொண்டு வருகிறார்கள். இப்படி எத்தனை சேனல்கள் வந்தாலும் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் டிவி தான். அதற்கு அடுத்த இடத்தில் தான் விஜய் டிவி இருக்கின்றது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை ஆட்டம் காண வைத்திருக்கின்றது விஜய் டிவி.
அந்த வகையில் இந்த வாரம் ஆறாவது இடத்தில் வள்ளி சீரியலை பின்னுக்கு தள்ளி பாக்கியலட்சுமி சீரியல் 7.12 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் தற்போது ராதிகாவை தள்ளி விட்டது ஈஸ்வரி தான் என்று சொல்லி கதைக்களம் விறுவிறுப்பாக சென்று வருகின்றது.

அடுத்ததாக ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றது வானத்தைப்போல சீரியல். அண்ணன் தங்கை பாசத்தை வைத்து பல வருடங்களாக உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த சீரியல் 7.50 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கின்றது. அடுத்ததாக சன் டிவியில் புதிதாக வந்த மருமகள் சீரியல் 7.58 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கின்றது.
இந்த சீரியலுக்கு படிப்படியாக வரவேற்பு அதிகரித்து வருகின்றது. அடுத்ததாக கயல் சீரியல் 8.8 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது. சிங்க பெண்ணே சீரியல் ஆரம்ப நாள் முதலே முதலிடத்தை பிடித்து வந்த நிலையில் அதை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை தட்டி தூக்கியிருக்கின்றது.

சிறகடிக்க ஆசை 8.38 புள்ளிகள் உடன் முதலிடத்திலும் சிங்க பெண்ணே சீரியல் 8.27 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில இருக்கின்றது. விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசையில் மனோஜ் எப்படி மாட்டிக் கொள்ளப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
