சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கின்றது என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம் .
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து அண்ணாச்சி கடையில் வாங்கிய எலுமிச்சம் பழத்தை குங்குமம் தடவி விட்டு சாமி புகைப்படத்திற்கு முன்பு வைத்துவிட்டு யார் நகையை எடுத்தார்களோ அவர்களின் வாய் இழுத்துக் கொள்ளும் என்று கூறியவுடன் மனோஜ்க்கு பயம் தொடங்கிவிட்டது. உண்மையாகவே அப்படி எதுவும் நடந்து விடுமோ என்று பயதிலேயே இருந்து வருகின்றார்.

இதனால் இரவு முழுவதும் தூங்காமலேயே இருந்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க மறுநாள் காலையில் எழுந்த விஜயாவும், மனோஜம் உடனே ஒரு மந்திரவாதியை சந்தித்து நடந்து அனைத்தையும் கூறுகிறார்கள். அவரும் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் அதற்கான தண்டனை உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். ஆனால் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி இருக்கின்றது என்று கூறி புது எலுமிச்சம் பழத்தை அவர்களிடம் கொடுக்கின்றார்.,
உடனே இதை எடுத்துட்டு வந்து ரூமில் வைத்து பூஜை செய்யுங்கள் என்று கூறுகின்றார். உடனே இருவரும் சென்று அந்த எலுமிச்சம் பழத்தை அங்கு வைத்து விடுகிறார்கள். மனோஜ்க்கு இருந்தாலும் பயத்தால் விடிய விடிய தூங்காமல் இருந்து கொண்டிருக்கின்றார். இதை புரிந்து கொண்ட முத்து இன்னும் பயத்தை அதிகரிப்பதற்காக ஒரு ஆட்டம் ஆடினார். அதில் மிகுந்த பயமடைந்த மனோஜும், விஜயாவும் இரவு அனைவரும் தூங்கிய பிறகு சாமி ரூமுக்கு சென்று அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து தூர போட்டு விடலாம் என்று பிளான் செய்கிறார்கள்.

அப்படியே அவர்கள் செல்லும்போது கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார்கள். முத்து அனைவரையும் கூப்பிட்டு விஜயா மனோஜின் உண்மையான முகத்தை வெட்ட வெளிச்சமாக மனோஜை கோபமாக அடிக்கின்றார் அண்ணாமலை. இதனால் உண்மையை உளறி விடுகின்றார் மனோஜ். என்ன மன்னிச்சிடுங்க அப்பா நான் தான் மீனாவின் நகையை எடுத்துட்டு போய் வித்துட்டேன்.
அதற்கு பதிலாக போலி நகையை எடுத்து வந்து அம்மா கிட்ட கொடுத்தேன் என்று கூறி விடுகின்றார். இதனால் அண்ணாமலை மனோஜை வெளுவெளு என்று அடிக்கிறார். விஜயா தடுக்கும் போதெல்லாம் நீ எல்லாம் பேசாத, வாயை திறக்காத இப்படி ஒரு அம்மா இருந்தா பிள்ளைங்க தப்பு பண்ண தான் செய்வாங்க என்று விஜயாவையும் கடுமையாக திட்டி விடுகின்றார்.

அது மட்டும் இல்லாமல் மனோஜ் அடிக்கும் போது ரோகினியால் அவரை தடுக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக இவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிவிட்டார் முத்து . இதை பயன்படுத்தி மீனா ரோகினி இடம் இப்ப புரிகிறதா உங்க புருஷன் என் புருஷன் மாதிரி இல்ல என்று சொல்லிக் காட்டுகின்றார். ஒருவழியாக மனோஜ் மற்றும் விஜயாவின் ஆட்டத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது.
