பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கின்றது என்பதை இதில் பார்ப்போம்.
ராதிகாவின் மகளான மயூ கொடுத்த வாக்கு மூலத்தின் படி ஈஸ்வரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறி நீதிபதி அவரை நிரபராதி என்று தீர்ப்பு கூறிவிட்டனர். இதனால் பாக்கியாவின் மொத்த குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றது. அதையடுத்து பாக்கியா மயூ இடம் சென்று நன்றி கூற சொல்கின்றார். அப்போது ராதிகா அவரை கண்டுபிடித்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

மேலும் அம்மாவையும் பொய் புகார் கொடுத்தியா என்று திட்டுகின்றார். ஆனால் ராதிகா எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கின்றார். இப்படி ஒரு பொய் புகார் கொடுத்து ஈஸ்வரியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டோமே என்ற எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் கோபத்துடன் செல்கின்றார். இதை எடுத்து ஈஸ்வரி வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்.
அமிர்தா அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி அழுது கொண்டிருக்கின்றார். இதைப் பார்த்த பாக்கியலட்சுமி உடனே அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கின்றார். மாமியாருக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிவிடைகளையும் செய்து அவரை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முயற்சி செய்கின்றார்.

உடனே தாத்தாவும் ஈஸ்வரியும் சேர்ந்து பாக்கியாவுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபுறம் ராதிகா வீட்டுக்கு போன கோபி ராதிகாவிடம் சண்டை போடுகிறார். ஆனாலும் ராதிகா கோபமாக கோபியிடம் சண்டை போடுகின்றார். ஆக மொத்தத்தில் கோபி தான் தற்போது இந்த பக்கமும் இல்லாமல் அந்த பக்கமும் இல்லாமல் தனி மரமாக நின்று கொண்டிருக்கின்றார். இருப்பினும் மீது அவருக்கு பாசம் குறையவில்லை. மயூக்காகவாவது ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார் கோபி. இப்படி இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகின்றது.
