Categories: சினிமா

பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட விவகாரம்.. உண்மையை ஒற்றுக் கொண்டதா விஜய் டிவி..? அவங்களே வெளியிட்ட வீடியோ..!!

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் பொதுவாக வெளியேற்றப்பட மாட்டார்கள். அப்படி இருக்க கமல்ஹாசன் போன வாரம் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வெளியேற்றினார்.

போட்டியில் தொடர்ந்து நீடிக்க கூடியவர் என கருதப்பட்ட பிரதீப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை எலிமினேட் செய்ய வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் பிரதீபால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.

எது எப்படி இருந்தாலும் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இப்போது வரை குரல் கொடுத்து வருகின்றனர். பிரச்சனைகளை கமல் கையாளும் விதம் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அப்படி இருந்து பிரதீப் ஆண்டனியை இப்படி வெளியேற்றியது ஏன் என பலரும் கமலுக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் பேசுவதை ட்ரோல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ விவாதத்தின் போது அவர்கள் பிரதீப் ஆண்டனி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவர்களை ரோல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என்ன? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார் என கூறப்படும் நிலையில் இப்படி அவர்களையே ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டதன் அர்த்தம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…

2 minutes ago

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

5 minutes ago

“டாடா, பிர்லா முதல் ஸ்டார்ட்அப் வரை”… இந்திய கார்ப்பரேட் உலகில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம்…. ஊழியர்களுக்காகத் தேடி வந்த குட் நியூஸ்….!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…

5 minutes ago

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

11 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

11 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago