Categories: சினிமா

இந்த நல்ல மனசு எத்தனை பேருக்கு வரும்..? உதவி கேட்டு வந்த அழைப்பு.. நேரடியாக வீட்டிற்கே சென்ற நடிகர் பாலா(வீடியோ)..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது வரை 3  ஆம்புலன்ஸ் தனது சொந்த பணத்தை போட்டு ஏழை எளிய மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார் . சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். இதைத்தொடர்ந்து தாமரைக்கரை மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை மற்றும் இரும்பு கூடை போன்ற வேளாண் உபகரணங்களையும் பாலா சமீபத்தில் வாங்கி கொடுத்திருந்தார். இந்நிலையில் பாலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அந்த போனில் பேசிய ஒரு தாய், தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பற்றி உங்களுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஏதாவது பகிர்ந்தால், மருத்துவ உதவிக்கு ஃபண்ட் கிடைக்கும் என கூறியுள்ளார். மகள் சம்பந்ப்பட்ட சில வீடியோக்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்த பாலா  அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் தன்னால் முடிந்தவரை ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்தது மட்டும் இன்றி, அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தானே ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாலாவை  மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

55 seconds ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

7 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

10 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

17 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

22 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

23 minutes ago