அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில் உருவான ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி ரிலீசானது. இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஜவான் படத்திற்கு இதுவரை இல்லாத பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் உலகம் முழுவதும் ஜவான் படம் 129 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டாவது நாளில் 240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து படம் ரிலீசான 5 நாட்களில் மொத்த வசூல் 574.80 கோடி ரூபாயும், பத்தாவது நாளில் மொத்த வசூல் 797.50 கோடியையும் எட்டியது. இந்நிலையில் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக உலகம் முழுவதும் ஜவான் படம் 1004.92 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதற்கு முன் யாரும் பார்த்திராத வெற்றி எனப்பட குழு வீடியோவை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படம் வெளியான 19 நாட்களிலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…