#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்தே நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கும் பிக் பாஸ் எட்டாவது சீசனில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக நேற்று கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். அவர் கல்கி தக் லைஃப் ஆகிய படங்களின் இரண்டாவது பாகம் இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் அவர் AI தொழில்நுட்பம் பற்றி படிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருகிற எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இன்றைய சீசனங்களில் கமலஹாசன் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்புவும் மற்றொரு எபிசோடில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தொகுத்து வழங்கினார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் சிம்பு அல்லது விஜய் சேதுபதி இருவரில் யாராவது ஒருவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…