#image_title
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். விஜயின் 69-ஆவது படத்தை வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது.
கோட் திரைப்படத்தின் முதல் சிங்களான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஓட்டிட்டி உரிமையை netflix நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பிரபல விஜய் டிவி விஜயின் கோட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…