Categories: சினிமா

வாடிவாசலுக்கு விடிவு காலம் பொறந்தாச்சு.. சூர்யா நடிப்பாரா மாட்டாரா..? கேள்விக்கான பதிலும் கிடைச்சாச்சு..!

Spread the love

வாடிவாசல் திரைப்படம் வருமா வராதா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு இன்பச் செய்தி வந்திருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சூர்யா தான் நடிக்கப் போகிறார் என்கின்ற தகவலும் கிடைத்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். நடிகர்களுக்காக திரைப்படங்களுக்கு சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு மத்தியில் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே திரையரங்குக்கு படையெடுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு இவரின் திரைப்படம் என்றால் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும் . வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

இவரின் இயக்கத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் அந்த அளவுக்கு தோல்வியை சந்தித்ததே கிடையாது. தேசிய விருதுகளையும் பெற்ற ஒரு சிறப்பான இயக்குனர். தற்போது விஜய் சேதுபதி சூரியின் நடிப்பில் விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என கூறப்படுகின்றது. விடுதலை படம் ஆரம்பிப்பதற்கு முன்கூட்டியே சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கின்ற திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியானது.

இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார் என்றும் இதற்காக ஜல்லிக்கட்டு காளை வாங்கி சூர்யா வீட்டில் கட்டி அதோடு பழகி வருகிறார் என பல தகவல்கள் வெளியானது. ஆனால் அதை தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இது ஒருபுறம் இருக்க இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை மற்றும் விடுதலை 1, 2 என கடந்துவிட்டார். ஆனால் சூர்யா படத்தின் அப்டேட் மட்டும் வரவில்லை.

இதற்கு இடையில் நடிகர் சூர்யா, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து விட்டார் தற்போது கங்குவா திரைப்படத்திலும் நடித்து முடித்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாடிவாசல் திரைப்படம் அவ்வளவுதான் டிராப் என்று கூறி வந்தார்கள்.

ஆனால் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது. அதாவது வருகிற ஆகஸ்ட் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் துவங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

6 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago