தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்தவ விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார். அப்போது உரையாற்றிய அவர், நம்பிக்கைக்கு உதாரணமாக பைபிளில் இடம்பெற்றுள்ள யோசேப்பின் (ஜோசப்) கதையைக் குறிப்பிட்டார். “சொந்த சகோதரர்களாலேயே துரோகம் இழைக்கப்பட்டு, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட ஒருவர், அந்தத் தடைகளைத் தாண்டி மீண்டு வந்து அதே நாட்டிற்கு அரசனாக உயர்ந்தார்” என்று கூறினார்.
மேலும், “இந்தக் கதை யாருடையது என்பது உங்களுக்கே தெரியும்” என்று புன்னகையுடன் கூறி, தனது அரசியல் பயணத்தை மறைமுகமாக அக்கூற்றுடன் தொடர்புபடுத்திப் பேசினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
