தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் யாருக்கு அதில் அதிக லாபம் இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடந்துள்ளது. அதில் NDA கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தால் திமுகவுக்கு 50 சதவீத வாக்குகளும் NDA கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும், சீமானுக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி ஏற்பட்டால் திமுக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் NDA கூட்டணியில் விஜய் இணைந்தால் அது திமுகவுக்கு தான் லாபம் என்று கூறப்படுகிறது.
