தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக விஜய் காலத்தில் இறங்கிய பிறகு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இதுவரை விஜய் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றார்.
இந்நிலையில் RSS சித்தாந்தத்துடன் செயல்படும் விஜய் பாஜக கூட்டணியில் இணைவார் என்று அப்பாவு கூறி இருந்தார். அது பற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் கேட்க, அப்பாவுவின் விருப்பம் நிறைவேறும் என்றும் NDA கூட்டணியில் விஜய் இணைவார் என்றும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேராது என்று சொல்லிவரும் நிலையில் இந்த கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
