தப்பி தவறையும் இந்த உணவு மட்டும் சாப்பிடாதீங்க… கொலஸ்ட்ரால் தாறுமாறாக அதிகரிக்கும்… உடல் எடையை கூட்டும் முக்கியமான உணவுகள் லிஸ்ட் இதோ…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய உணவு பழக்கங்கள் என்பது மொத்தமாக மாறிவிட்டது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை யாரும் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. பீட்சா, பர்கர், பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்றுதான் பெரும்பாலான நபர்கள் நினைக்கின்றனர். இது ஒரு காரணமாக இருந்தாலும் நாம் அன்றாடம் செய்யக்கூடிய சில தவறுகள் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளது. நல்ல கொழுப்பை எச்டிஎல் என்றும், கெட்ட கொழுப்பாக எல் டி எல் மற்றும் டிரை கிளிசரைடு ஆகும். இதில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு சிக்கல் ஏற்படும். நாம் செய்யக்கூடிய சிறுசிறு தவறுகள் தான் இதற்கு வழி வகுக்கின்றன.

நார்ச்சத்து உணவுகளாக ஓட்ஸ், பீன்ஸ் வகைகள், பேரிக்காய், ஆப்பிள், முளைகட்டிய தானியங்கள் ஆகியவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது. அடிக்கடி வருத்தம் மற்றும் பொறித்த உணவுகள் எடுத்துக் கொள்வது கொழுப்பை அதிகரிப்பதுடன் ட்ரான் பேட்டையும் அதிகரிக்க செய்கின்றது. இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். கெட்ட கொழுப்பு அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மீதியான உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது மிகவும் தவறு.

   

சமைத்த கடாயில் அடிப்பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் மற்றும் மசாலாவுடன் மூடி வைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடு செய்யும் போது கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய தமனிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை அடுத்து பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் மற்றும் வெண்ணெய் அதிகமாக பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆலிவ் ஆயில் மீதமான அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தவரை எண்ணெய் ஊற்றி சமைக்காமல் அடிக்கடி ஸ்பிரே செய்து பயன்படுத்தலாம். வெண்ணெய் பயன்படுத்தும் போது உணவில் கலோரிகள் அதிகரித்து கொழும்பின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பு மற்றும் சர்க்கரையையும் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.

   

அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது ஹைபர்டென்சனை பயன்படுத்தி இதை ஆரோக்கியத்தை பாதிக்கும். சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் பிறை கிளிசரைடுகள் அதிகப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு அதிகரிக்கும். நீங்கள் சாப்பிடக்கூடிய பிரட், சூப் மற்றும் சாஸ் ஆகியவற்றாலும் கொழுப்பு அதிகரிக்கும். சமைக்கும்போது சுவையை அதிகரிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இதுபோன்ற உணவுகளை இனி முற்றிலும் தவிர்ப்பது நல்லது.