“நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல”… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவை பார்த்து கதறிய தாடி பாலாஜி.. இணையத்தை உலுக்கும் வீடியோ….!

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் எடுத்து வரும் பல்வேறு அதிரடி முடிவுகள் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளன. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த அரசியல் இன்னிங்ஸ், ஆதரவு மற்றும் விமர்சனங்கள் என இரண்டையுமே சமஅளவில் பெற்று வருகிறது. இந்தச் சூழலில், விஜய்யின் தீவிர ரசிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தாடி பாலாஜி வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

நீண்ட காலமாக விஜய்யின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த தாடி பாலாஜி, விஜய் அரசியல் கட்சித் தொடங்கியபோது தன் நெஞ்சில் அவரது உருவத்தைப் பச்சைக் குத்திக்கொண்டு கட்சியில் இணைந்தார். பின்னர் சில மனக்கசப்புகள் காரணமாகக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், “என் ஆதரவு எப்போதும் விஜய்க்குத்தான்” என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய் சார் இப்படி செய்வார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, மக்களும் எதிர்பார்க்கலை. அவர் பதவியேற்ற முதல் நாளிலிருந்து தொடர்ந்து அதிரடியான விஷயங்களைச் செய்து, பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்” என முதலமைச்சர் விஜய்யை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் செய்திகளைப் பார்ப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள பாலாஜி, இப்போது குழந்தைகள் கூட செய்தி பார்க்கத் தொடங்கி, அரசியல் பேச ஆரம்பித்துவிட்டதே விஜய்யின் முதல் சாதனை என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மேலும், யாராலும் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளதாகக் கூறிய பாலாஜி, குறிப்பாக தற்போதைய அமைச்சரவை அமைப்பில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பதை ஒரு வரலாற்றுச் சாதனையாக சுட்டிக்காட்டியுள்ளார். “எம்எல்ஏ பதவி கொடுப்பது சாதாரண விஷயம், ஆனால் இதுவரை யாரும் எடுக்காத துணிச்சலான முடிவை எடுத்து, எல்லா சமூகத்தினராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்” என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகிய பிறகும் “உங்களுக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் இருக்கும் சார்” என்று தாடி பாலாஜி இந்த வீடியோவில் பேசியிருப்பது, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள், “கட்சியிலிருந்து விலகிய பிறகும் விஜய்யின் நல்ல முடிவுகளைப் பாராட்டுகிறார்” என்று ஒருபுறம் வாழ்த்தினாலும், மறுபுறம் “இது மீண்டும் கட்சியில் இணைவதற்கான சிக்னலா?” என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் தொடர்ந்து பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

23 minutes ago

அய்யோ நீயெல்லாம் ஒரு மனுஷனா?…. தெருநாயை கோடாரியால் வெட்டி கொன்ற நபர்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், வீட்டின் முன்பாகக் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கோடாரியுடன் வந்த நபர் ஒருவர்…

26 minutes ago

“பயப்படாதீங்க பாபு”…. நேரில் சென்று கையை பிடித்து தைரியம் சொன்ன முதல்வர் விஜய்….. MGM மருத்துவமனையில் நடந்தது என்ன…?

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் (MGM)…

37 minutes ago

ரூ. 70 கோடி டீலிங் தோல்வி?…. ஜெம் வீரமணி வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மகன்…. வெளியான லுக் அவுட் நோட்டீஸ்….. சற்றுமுன் பரபரப்பு….!

10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் R. வீரமணி உட்பட மூவரை காவல்துறையினர்…

43 minutes ago

தமிழக பாஜகவுக்கு புதிய மாஸ்டர் பிளான்…. டெல்லியில் இருந்து களமிறக்கப்பட்ட முக்கிய புள்ளி….வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு….!

பாஜகவின் தேசிய தலைமை, நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை நியமித்து…

48 minutes ago

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் நடந்த அதிசயம்… கேஎப்சி பார்க்கிங்கில் பிறந்த குழந்தை… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…?

பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…

1 மணத்தியாலம் ago