தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 என்ற ‘மேஜிக்’ எண்ணைத் தமிழக வெற்றிக் கழகம் எட்டியுள்ளது. ஏற்கனவே தவெக வசம் 107 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் (5), சிபிஎம் (2), சிபிஐ (2) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதால், அக்கட்சியின் தலைவர் விஜய் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளார்.
இந்த முக்கிய அரசியல் நகர்வைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளார்; அவர் நாளைக்கே முதலமைச்சராகப் பதவியேற்பாரா அல்லது வேறு தேதியில் விழா நடைபெறுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
