தமிழக அரசியலில் நிலவி வந்த 59 ஆண்டுகால திராவிட சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் சுமார் 120 எம்.எல்.ஏ-க்களின் பலத்தைப் பெற்றுள்ள விஜய், தமிழக முதலமைச்சராவது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் விடியலாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் 100 நாட்களில் புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
நிர்வாக ரீதியாக அதிரடி காட்டும் வகையில், தமிழகத்தின் மிக முக்கியமான இரண்டு துறைகளை விஜய் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். சட்டம்-ஒழுங்கு, காவல்துறை மற்றும் உளவுத்துறை உள்ளடக்கிய உள்துறையை எப்போதும் போல முதலமைச்சரே நிர்வகிக்க உள்ள நிலையில், கூடுதலாக நிதித்துறையையும் தன் வசமே வைத்துக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். மாநிலத்தின் வரவு-செலவு கணக்குகளில் எவ்விதக் குறைபாடும் இன்றி, நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையையும் தெளிவான அணுகுமுறையையும் உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிதாகப் பொறுப்பேற்கும் தவெக அரசுக்குத் தமிழகத்தின் தற்போதைய பிரம்மாண்டமான கடன் சுமை மிகப்பெரிய சவாலாகக் காத்திருக்கிறது. தமிழக அரசின் கணக்குப்படி மொத்த கடன் நிலுவை 9,55,000 கோடி ரூபாயாக உள்ள சூழலில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையேயான கடன் கணக்கீட்டில் சுமார் 26,000 கோடி ரூபாய் வித்தியாசம் நீடிக்கிறது. மத்திய அரசு தமிழகம் அதிக கடன் வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டும் நிலையில், இந்த நிதி முரண்பாடுகளைக் களைந்து மாநிலத்தின் நிதி நிலையைச் சீரமைப்பது புதிய முதலமைச்சருக்கு ஒரு பெரும் ‘அக்னிப் பரீட்சை’யாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 9.21 லட்சம் கோடியாக, அதாவது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. முந்தைய அரசின் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளித்து, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது புதிய அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலாகும். இந்த இக்கட்டான நிதிச் சூழலில், தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் நிதித்துறையைக் கொண்டு வரும் விஜய், தமிழகத்தின் பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்பதை அரசியல் வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…