தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கொளத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பாதியிலேயே பிரச்சாரத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இதே போன்ற நிலை தொடரும் எனக் கணித்துள்ள அவர், இனி வரும் நாட்களில் நேரடியாகப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து, வீடியோக்கள் மூலம் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனித்துவமான பிரச்சினைகளை முன்னிறுத்தி விஜய் பேசியுள்ள வீடியோக்கள் ஏற்கனவே தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அனைத்துத் தொகுதிகளையும் அவர் எளிதில் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மிக முக்கியமான தொகுதிகளுக்கு மட்டும் அவர் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டுவிஸ்ட் கலந்த ஷாக் தலைப்பு
