“மனிதாபிமானம் எங்கே போனது?… கங்கையில் நாய்க்குட்டியை அலறவிட்ட நபர்!”…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…. !!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

புண்ணிய நதியான கங்கையில் பாவங்களைக் கழுவுவதாகக் கூறி, நபர் ஒருவர் நாய்க்குட்டியைத் தண்ணீரில் மூழ்கடித்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், குளிரில் நடுங்கும் நாய்க்குட்டி தன்னை விடுவித்துக்கொள்ள போராடியும், அந்த நபர் அதைத் தொடர்ந்து தண்ணீருக்குள் அமிழ்த்துகிறார். “கங்கையில் மூழ்கினால் துக்கங்களும் பாவங்களும் நீங்கும் என்பதால் நாயையும் அமிழ்த்தினேன்” என்ற அவரது விளக்கத்தைக் கண்ட இணையவாசிகள், இது மத சடங்கு அல்ல, விலங்கு வதை என்று கூறி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் காணொளியைக் கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்கள், சடங்குகள் குறித்து அறியாத வாயில்லா ஜீவனைத் துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் எனப் பதிவிட்டுள்ளனர். “பாவங்கள் இதைக் செய்வதால் கரையாது, மாறாக இது போன்ற செயல்கள் புதிய பாவங்களையே சேர்க்கும்” என்றும், அந்த நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஒருபுறம் அந்த நபர் நல்ல எண்ணத்தில் இதைச் செய்திருக்கலாம் என்று சிலர் கூறினாலும், பெரும்பாலானோர் இது அந்தப் பிஞ்சு நாய்க்குட்டிக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்றும், விலங்குகள் மீதான இத்தகைய அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.