“10% கூட இல்லையா?”… விஜய்க்கு விழுந்த பலத்த அடி… ரகசிய சர்வேயால் அதிர்ச்சியில் தவெக….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த சில வாரங்களாக அரசியல் களத்தில் மிகுந்த அமைதி காத்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் விஜய்க்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதே இந்த மௌனத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அந்த ஆய்வின்படி, தவெக கட்சிக்கு மாநில அளவில் 10 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளுக்குப் பின்னால் தவெக நீடிப்பதாக வெளியான தகவல்கள் அக்கட்சித் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, விஜய்க்கு நகர்ப்புறங்களில் ஓரளவிற்கு ஆதரவு இருந்தாலும், கிராமப்புறங்களில் மக்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே உள்ளது. வட மாவட்டங்களில் ஓரளவிற்கு வாக்குகளைப் பெற்றாலும், ஒட்டுமொத்த தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் கட்சியால் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்களின் ஆதரவு இருந்தாலும், அது தேர்தலை வெல்லுமளவிற்கு போதுமானதாக இல்லை என்பதும், அதிமுகவின் வாக்கு வங்கியை தவெகவால் பெரிய அளவில் அசைக்க முடியவில்லை என்பதும் இந்த சர்வேயின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

   

கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்த விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. “நீங்கள் சொன்னது போல் கள நிலவரம் இல்லையே” என்று அவர் கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே பொங்கல் விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கட்சி நிர்வாகிகள் அனைவரும் தற்போது ‘சைலண்ட் மோடில்’ இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்த பின்னடைவை விஜய் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.