தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கட்சியில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக வாக்குச்சாவடி குழு கூட்டம் அமைப்பது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றார். தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார். இதுவரை இரண்டு கட்டமாக பிரச்சாரம் நடந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் 2026 தேர்தலுக்காக விஜய் புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியில், N. ஆனந்த், அருண் ராஜ் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் மட்டுமே மக்களுக்கு அறியப்பட்டவர்களாக உள்ளன. பல மாவட்டச் செயலாளர்களை நிர்வாகிகளுக்கு கூட தெரியாத சூழல் உள்ளதால் பரப்புரையின் போது அந்தந்த தொகுதிகளின் முக்கிய நிர்வாகிகளை மக்களுக்கு விஜய் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…