#FLASH NEWS: மதுரை மாநாட்டை வீட்டிலிருந்தே பாருங்க… அங்கே வர வேண்டாம்… தவெக தலைவர் விஜய் சற்றுமுன் அறிக்கை..!!

By Soundarya on ஆவணி 18, 2025

Spread the love

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி என்ற  பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார். மேலும் இந்த மாதம் மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தவெக மதுரை மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.