ரோஹித் சர்மாவை தினமும் 10 கி.மீ ஓடவிட்டால்… நிச்சயம் அது நடக்கும்… இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் சொன்ன காரணம்..!!

By Srimathi on ஆவணி 18, 2025

Spread the love

ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்ற ரோகித் சர்மா, உலகக்கோப்பை 2027 வரை விளையாடுவதாக இலக்கை கொண்டுள்ளார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா அவசியம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் கூறினார்.  இதை பற்றி விரிவாக பேசுகையில், “ரோகித் சர்மா சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், நியூசிலாந்தை எதிர்த்து, 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஒருபுறம் ரோகித் சர்மாவின் பேட்டிங் மறுபுறம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம், 45 வயது வரை அவரால் விளையாட முடியும் என்பதை நிரூபித்தது. தினமும் அவரை 10 கிலோமீட்டர் வரை ஓட வையுங்கள், அப்படி பயிற்சியை மேற்கொண்டால், நிச்சயமாக 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ரோகித் சர்மா நமக்கு தேவை. இதுபோன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறிய கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இந்த அணியை வைத்து யாரை வேணாலும் வெல்ல முடியும்”, என தெரிவித்தார். யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் என்பது குறிப்பிட்ட தக்கது.