நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்திருக்கும் பீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் அதன் பிரஸ்மீட்டில் அவர் பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்ற படத்துடன் வலம் வரும் இவர் பல சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். நடிகராக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், வயதான கதாபாத்திரம் என எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் தனது முழு அர்ப்பணிப்புடன் நடிக்க கூடிய ஒரு சிறந்த நடிகர்.
இவர் தொடர்ந்து வில்லன் கதா பத்திரங்களில் நடித்து அசத்தி வந்தார். ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்த விஜய் சேதுபதி தற்போது மகாராஜா திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சிறந்த கம்பேக் என பலரும் கூறி வருகிறார்கள்.
இவரது மகன் சூர்யா தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அரசு இயக்கியிருக்கும் பீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்திருக்கின்றார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு தனது மகனுக்கு பல அறிவுரைகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா இந்த தந்தையர் தினத்திற்கு தனது அப்பா விஜய் சேதுபதிக்கு சிறந்த பரிசு ஒன்றை கொடுக்க எண்ணினேன். அதுதான் இது என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.